சீராக் 19

குடிகாரரான தொழிலாளர்கள் செல்வர்களாக முடியாது: சிறியவற்றை புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர். மதுவும் மாதும் ஞானிகளை நெறிபிறழச் செய்யும்: விலைமாதரோடு உறவு கொள்வோர் அசட்டுத் துணிவு கொள்வர். அவர்களது உடல் அழிவுற, புழு தின்னும்: அசட்டுத் துணிவு கொண்டோர் விரைவில் எடுத்துக்கொள்ளப் பெறுவர்.

பிறரை எளிதில் நம்புவோர் கருத்து ஆழமற்றோர்: பாவம் செய்வோர் தங்களுக்கே தீங்கு இழைத்துக் கொள்கின்றனர். தீச்செயல்களில் மகிழ்ச்சி காண்போர் கண்டனத்திற்கு உள்ளாவர். புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள் குறையும். உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே: சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது. நண்பராயினும் பகைவராயினும் அதைத் தெரிவிக்காதே: மறைப்பது உனக்குப் பாவமானாலொழிய அதை வெளிப்படுத்தாதே. நீ கூறியதைக் கேட்டு உன்னைக் கவனித்தோர் காலம் வரும்போது உன்னை வெறுப்பர்.

எதையாவது நீ கேள்வியுற்றாயா? அது உன்னோடு மடியட்டும். துணிவுகொள்: எதுவும் உன்னை அசைக்கமுடியாது. அறிவிலிகள் தாங்கள் கேட்டவற்றை வெளியிடாமல் இருப்பது அவர்களுக்குப் பேறுகாலத் துன்பம் போல் இருக்கும். தொடையில் அம்பு ஆழமாகப் பாயும்: அதுபோலப் புரளி அறிவிலிகளின் உள்ளத்தில் உறுத்தும்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே முழு ஞானம்: முழு ஞானம் என்பது திருச்சட்டத்தின் நிறைவே.(அவரது எல்லாம் வல்ல தன்மை பற்றிய அறிவே.

அறிவுத்திறன் இருந்தும் திருச்சட்டத்தை மீறுவோரைவிட அறிவுக்கூர்மை இல்லாது போயினும் இறையச்சம் கொண்டோர் மேலானோர்.

சீராக் 19:1-12, 20, 24